திஸ்ஸமகாராம பிரதேசத்தில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (2) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திஸ்ஸமகாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு கடும் மோதல் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
ரோந்து நடவடிக்கைக் குழுவின் பிரதானியான பொலிஸ் அதிகாரி ஒருவர், சம்பவம் தொடர்பில் அந்த வீட்டு சிறுமியொருவரிடம் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது, அவர் குறித்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.