யாழ். சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

0 1

யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (3) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்துமாறு உள்ளூர் கடற்றொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய கடற்றொழிலாளர்களை சிறீதரன் சிறையில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் உள்ளூர் வளம் அழிக்கப்படுவதோடு உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அழிகின்றது.

அதனால் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களாக உங்களைச் சிறைப் பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும்போது உங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது என்றார்.

சிறையில் குறைகள் இல்லாதபோதும் 40 நாட்களாகச் சிறையில் உள்ளபோதும் ஒரேயொரு தடவை மட்டும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

எனவே, தொலைபேசியில் உரையாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு உதவுமாறும், சிறைச்சாலையில் இருந்தாலும் வெளியுலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திகளைப் பார்வையிட சிறைக் கூடத்தில் ஒரு தொலைக்காட்சி வசதியை ஏற்படுத்தித் தருமாறும் இந்திய கடற்றொழிலாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.