எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கோ, தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கோ ஈ-8 தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால், எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு எந்தவித சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தன் தலைவர் கோசல விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணம் வசூலிக்கும் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதற்கான அனுமதியை எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கவில்லை. அதனால் மோசடி காரர்களிடம் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
அத்துடன் ஈ-8 விசா பிரிவின் கீழ் செயல்பட எந்த தனியார் முகவர் நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஈ-8 விசாவின் கீழ் தென்கொரியாவில் தொழிலுக்காக வெளிநாடு செல்ல விருப்பம் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுபோன்ற பணம் அல்லது வேறு ஏதேனும் செயல்முறைகளில் சிக்கினால், கொரியாவிற்கு அல்லது வேறு எந்த நாட்டிற்கும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல முடியாத அபாயம் இருப்பதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அத்தகைய மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்குமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறது.
எனவே, இலங்கை மக்கள் அனைவரும் இதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்கிக் கொண்டு வெளிநாடு செல்லும் கனவை சிதைத்துக்கொள்ள வேண்டாம்.
மேலும் எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ அத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் சட்டவிரோதமானது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதனை ஆதரிக்கும் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், அல்லது முகவர் நிலையங்கள் அல்லாத வேலைவாய்ப்பு நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல் கைது செய்யப்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.