முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

13

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சிக்கல்! | Prices Of Eggs Chicken In Sri Lanka

அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகளில் கடந்த வாரம் மாற்றம் பதிவாகியது.

இதற்கமைய, உள்நாட்டு சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சில்லறை விலைகள் கணிசமான அளவு குறைவடைந்தது.

இதன்படி முட்டையொன்றின் விலை 26 முதல் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 650 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையிலான விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.