மக்களினுடைய தேவைப்பாடுகளை நாடாளுமன்றத்தில் தமது தரப்பு பேசுவது பிழை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தான் பேசுவது மாத்திரம் சரி என்றும் கூறும் ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாக சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்களை மேற்கோள்கட்டி ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் யாழில், கருத்து தெரிவித்த அவர்,
தையிட்டி விகாரையை பற்றியோ, வெடுக்குநாரி மலை பிரச்சினை பற்றியோ தமது தரப்பு பேசக்கூடாது என மக்கள் தெரிவிக்கவில்லை.
மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இவற்றை நாங்கள் பேசி ஆகவேண்டும்.
தாங்கள் பிழை என்றால் மக்கள் அதற்கான தீர்ப்பை எமக்கு வழங்கட்டும்.
இங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மக்களே உண்மையான நீதிபதி” என்றார்.
Comments are closed.