கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் பற்றிய தகவல்களைக் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“தகவல் அறியும் சட்டம் 2016 e 12 இன் விதிகளின்படி, ஜனவரி 2025 மாதத்தில் வெளியிடப்பட்ட கொள்கலன்கள் பற்றிய பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளளேன்.
1) ஜனவரி 2025 மாதத்தில் சுங்க ஆய்வு இல்லாமல் எத்தனை கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன?
2) கூறப்பட்ட மனுக்களில் பங்களிப்பாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் யாவை?
3) இங்கு ஒவ்வொரு பெறுநரிடமும் செய்யப்பட்ட முந்தைய சுங்க தவறுகள் என்ன?
4) ஆய்வு இல்லாமல் வெளியிடப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை சிவப்பு வழியில் (ரெட் சேனல்) அனுப்ப பரிந்துரைக்கப்பட்டதா?
5) சிவப்பு மற்றும் ஆரஞ்சு வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கொள்கலன்களை எந்த நாடுகள் இலங்கைக்கு அனுப்பியுள்ளன?
சிவப்பு மற்றும் ஆரஞ்சு வழித்தடங்களில் அனுப்ப பரிந்துரைக்கப்பட்ட கொள்கலன்களில் உள்ள பொருட்கள் யாவை?
இவற்றை தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்றுள்ளது.
Comments are closed.