ஜனாதிபதியாக ஏழாவது முறையாக தொடர்ந்து தெரிவாகும் புடினின் நண்பர்

0 4

பெலாரஸ்த் தலைவரும் ரஷ்யாவின் கூட்டாளியுமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொடர்ந்த்கு 7வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

மேற்கத்திய அரசாங்கங்கள் பல மோசடி என நிகாரித்துள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட்ட மற்ற நான்கு வேட்பாளர்களிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்ளாத லுகாஷென்கோ, 86.8 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.

முன்னாள் சோவியத் குடியரசு நாடான பெலாரஸில் சுதந்திரமான ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், வாக்கெடுப்பு சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடக்கவில்லை என்று ஐரோப்பிய அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, அனைத்து முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், பெலாரஸ் மக்களுக்கு வேறு வழியில்லை. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஏங்கும் அனைவருக்கும் இது ஒரு கசப்பான நாள் என்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது எதிர்க்கட்சிகளை சிறையில் அடைப்பது குறித்து கேட்டதற்கு, அவர்கள் தங்கள் சொந்த விதியைத் தெரிவு செய்து கொண்டதாக லுகாஷென்கோ பதிலளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்புவதற்கான ஒரு களமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் பெராலஸைப் பயன்படுத்த அனுமதித்திருந்தார்.

கடந்த 1994 முதல் பெலாரஸ் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்துவரும் லுகாஷென்கோ, தொடர்ச்சியாக 7வது முறையாக தேர்தலில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.