லெபனானில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பு திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடைபெற்ற மோதலின்போது கைப்பற்றிய சோவியத் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை செய்கிறது.
இதற்கான ஆரம்ப செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன.
சமீபத்தில், இஸ்ரேலிய அதிகாரிகள் உக்ரைனிய தூதரகத்துடன் ஆயுதங்களை அனுப்புவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவ விமானங்கள் இஸ்ரேலிலிருந்து போலாந்தின் கிழக்கு பகுதிக்கு புறப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
இஸ்ரேல் கைப்பற்றிய ஆயுதங்களில் 60% சோவியத் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை.
இதில், ஸ்னைப்பர் (sniper rifles) துப்பாக்கிகள் மற்றும் Kornet anti-tank ஏவுகணைகள் அடங்கும்.
இந்த ஆயுதங்கள் சிரியா வழியாக ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்தவை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாரன் ஹாஸ்கெல், கைப்பற்றிய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப பரிந்துரை செய்துள்ளார். இதற்காக, உக்ரைனிய தூதரகம் அவருக்கு நன்றி தெரிவித்தது.
இஸ்ரேல், பொதுவாக ரஷ்யாவுக்கு எதிராக நியாயமான அணுகுமுறையை தக்க வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான கூட்டணி அதிகரித்ததால், உக்ரைனுக்கு ஆதரவாக திரும்பியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில், ஈரான், ரஷ்யாவுக்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதேவேளை, ஈரான் ஆதரவு இயக்கங்கள், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலை எதிர்த்து செயல்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் உக்ரைனுக்கான புதிய ஆயுத அனுப்புதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.