உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0 5

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்தான், இன்று தன்னை ஒரு பெரிய ஒரு விடுதலைப் போராளி என்று கூறுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி பூநகரியில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறிப்பாக பெரிய ஒரு போராட்டங்களில் எங்களுக்கு அடி வாங்க தெரியும். சிறீதரன் போல ஒழிய மாட்டோம்.

அனைவருக்கும் தெரியும் இங்கே பெரிய ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அது அனைத்து தமிழ் மக்களும் அணி திரண்டு இருந்த காலம்.

அங்கே அப்போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நபர் இப்போது தான் பெரிய ஒரு விடுதலைப் போராளி என குறிப்பிடுகின்றார்

நாங்கள் எம் மக்களுடன் ஒன்று சேர விரும்புகின்றோம்.

ஆனால் ஒரே கட்சியில் உள்ள சிறீதரன் ஐயா நீங்களும் சுமந்திரனும் முதலில் ஒன்று சேருங்கள். தமிழ் மக்கள் ஒன்று சேர்வதை பற்றி அடுத்த கட்டம் பார்த்துக் கொள்ளலாம்.’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.