ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் பல, ஆஸ்கர் போட்டியில் இல்லை.
மாறாக, பெரிதும் எதிர்பார்க்கப்படாத, இந்தியச் சிறுமி ஒருவர் நடித்துள்ள ஒரு திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் உள்ளது.
ஆஸ்கர் போட்டியில், Best live action short என்னும் பிரிவில் ’அனுஜா’ என்னும் திரைப்படம் போட்டியிடுகிறது.
ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தன் அக்காவுடன் வேலை செய்யும் அனுஜா என்ற ஒரு ஒன்பது வயது சிறுமி, தன் எதிர்காலத்தையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றக்கூடிய, வேலையா அல்லது கல்வியா என்பது தொடர்பில் எடுக்கும் முடிவு குறித்த திரைப்படம் அனுஜா.
அனுஜாவாக நடித்திருக்கும் சிறுமியின் நிஜக்கதையும் கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரத்தின் கதைதான் எனலாம்.