538 புலம்பெயர்ந்தோர் கைது… அதிரடி நடவடிக்கையை துவக்கினார் ட்ரம்ப்

0 5

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்தே புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப்.

தற்போது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அவர் சொன்னதுபோலவே அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்.

ஆம், ட்ரம்ப் நிரவாகத்தால் 538 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ட்ரம்பின் ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt) என்பவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத புலம்பெயர் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு செய்தியில், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நாடுகடத்தல் ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கிறது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் கரோலின்.

Leave A Reply

Your email address will not be published.