அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரை ட்ரம்ப் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளாராம்.
ஆனால், பிரித்தானியாவின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக ட்ரம்பின் புதிய நண்பரான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் கூறிவருகிறார்.
உண்மை என்னவென்றால், ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எண்ணமே ஸ்டார்மருக்கு இல்லை.
இன்னொரு விடயம், அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம் அல்ல.
ஆக, அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான Karen Pierce என்பவர்தான் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ட்ரம்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங் உட்பட பலரும் தங்கள் பிரதிநிதிகளாக தூதர்களைத்தான் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.
ஆக, ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்ததாக உலக அரசியல்வாதியாக மாறியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளதில் உண்மையில்லை!