அன்னை பூபதி நினைவேந்தல் : உண்ணாவிரத போராட்டம்

0 4

தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது நினைவு நாளை நினைவுகூரும் முகமாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (19) தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்த அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள டவுனிங் வீதி 10 ஆம் எண்ணிலுள்ள பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

போராட்டத்தின் மூலம், பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச மேடைகளில் தமிழருக்கான உரிமை விவகாரம் மீண்டும் பேசப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், “அன்னை பூபதி ஒரு மகத்தான தியாகத்தின் அடையாளம்.

அவரது நினைவு நாளில், அவரது இலட்சியங்களை நிலைநாட்டும் விதமாக, உலக சக்திகளை நம்மை கேட்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.