அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்… பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம்

0 1

பிக்பாஸ் வரலாற்றில் எந்த ஒரு சீசனிலும் காதல் ஜோடியாக இணையாமல் இருந்தது இல்லை என்று கூறலாம்.

அப்படி ஒரு அமைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த சீசனில் அன்ஷிதா, விஷால், தர்ஷிகா காதல் கலாட்டா இருக்கும் என அவர்களின் சில நகர்வுகளால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, ஆன்ஷிதா வீட்டைவிட்டு வெளியேறும் போது விஷால் காதில் ஏதோ கூறினார், அது என்னவாக இருக்கும் என சில ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

அண்மையில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த அன்ஷிதாவிடம், விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா, அவர் காதில் என்ன கூறினீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நான் யாரையாவது காதலிக்கிறான் என்றால், காதில் ரகசியமாக சொல்ல மாட்டேன், சத்தமாகவே சொல்லி இருப்பேன்.

நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்றார். விஷால் காதில் என்ன சொன்னீர்கள் என கேட்டதற்கு நான் என்னுடைய எக்ஸ் காதலன் பெயரை கூறினேன் என்று கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.