65 வயதில் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருக்கும் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன பாருங்க

0 1

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகர்ஜுனா.

தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், 65 வயதிலும் இளமையாக இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வலம் வரும் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, நாகர்ஜுனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், ” நான் ஜிம்முக்கு செல்வதில்லை. ஆனால், வாரத்தில் 6 நாட்கள் காலையில் எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி மேற்கொள்வேன். அதை தொடர்ந்து, ஸ்விம்மிங் செய்வேன், கோல்ஃப் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.