கடந்த ஆண்டு கடுமையான விமர்சனங்களுக்குள்ளான திரைப்படமாக கங்குவா பார்க்கப்பட்டது. சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்த்த வைத்திருந்தனர்.
ஆனால், அப்படம் முழுமையாக அவர்களை திருப்திப்படுத்தவில்லை. திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட, OTT-யில் கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
கடுமையான விமர்சனம் செய்யும் அளவிற்கு மோசமான படம் இல்லை கங்குவா. நன்றாக தான் இருக்கிறது என பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் தகுதியுடைய படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இந்த லிஸ்டில் இந்திய சினிமாவின் சார்பில் தகுதியுடைய படங்களில் கங்குவா படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் படமும் இந்த லிஸ்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.