வட மத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்த வினாத்தாள் நேற்று (05.01.2025) நள்ளிரவு சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன் காரணமாக இன்றைய தினம் (06.01.2025) நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.