உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

0 3

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாத காலங்கள் தேவைப்படுகின்றன.

அதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.