அவுஸ்திரேலியா (Australia) – இந்தியா (India) அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று (14.12.2024) ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. போட்டியின் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில் விராட் கோலி (Virat Kohli) விளையாடி சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் இருபதுக்கு 20 ஆகிய 3 வகையான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அவுஸ்திரேலிய அணிக்கெதிராக அவர் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
முதல் வீரராக கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.