காசாவில் போரை நிறுத்தப் போவதில்லை! பதிலடிக்கு தயார் நிலையில் நெதன்யாகு

0 4

இஸ்ரேல்(Israel) – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த முயற்சிகள் தொடரும் நிலையில், காசாவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு( Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாங்கள் இப்போது போரை நிறுத்தினால், ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம். இதை நாங்கள் விரும்பவில்லை.

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க ஹமாஸை அழித்தொழித்தல், அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

எனினும், இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், “இஸ்ரேலானது ஹமாஸின் இராணுவத் திறனை சிதைக்க முடிந்தது. அதன் தலைமையை அடுத்தடுத்து கொன்று குவித்தது.

அந்த வெற்றிகளுடன், பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது.”என்று அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.