2025 இல் வந்து குவியப் போகும் சுற்றுலா பயணிகள் : நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

4

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா வலயங்கள் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சுற்றுலா வலயங்களை அறிமுகம் செய்தல், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் போன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும்.

இதேவேளை, அடுத்த வருடத்தில் 40 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடினமான சூழ்நிலையாக இருக்காது என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.