யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.