நடிப்பிலும், அரசியலிலும் புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பலவருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனுஷிற்கும் அக்ஷ்யா என்பவருக்கும் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அக்ஷ்யா திருமணத்திற்கு பின் மறுவீடு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதில், அக்ஷ்யா மிகவும் அழகாக கணவர் குடும்பத்திடம் இருந்து ஆசிர்வாதம் பெற்று விட்டு பிரிய மனமில்லாமல் செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
Comments are closed.