இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷ்னா? லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள்தானா?

10

கடந்த அக்டோபர் 6ம் தேதி ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8வது சீசன்.

நாம் அதிகம் பார்த்து பழகிய முகங்கள் தான் போட்டியாளர்களாக வந்துள்ளனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா 3 பேர் இதுவரை வெளியேறியுள்ள நிலையில் கடந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். இவர்களின் வரவால் மேலும் பிக்பாஸ் 8 வீடு சூடு பிடித்துள்ளது.

இந்த வாரம் முதன்முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது, இதில் புதிய என்ட்ரியை தாண்டி அனைவரையும் நாமினேட் செய்யலாம் என்றனர். 3

அதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

இவர்களில் குறைவான வாக்குகள் பெற்றிருப்பது ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா மற்றும் சுனிதா ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் நோ நாமினேஷன் என்பதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்கின்றனர். இதுவரை குறைந்த வாக்குகள் பெற்றிருக்கும் இவர்களின் யார் வெளியேறுவார் என்பதை காண்போம்.

Comments are closed.