அது போன்று யாரும் நடிக்க மாட்டார்கள்.. இளம் நடிகை குறித்து துல்கர் சல்மான் கூறிய அதிரடி தகவல்

5

மலையாள சினிமா மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல மூத்த நடிகர் மம்முட்டியின் மகனான இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மீனாட்சி சவுத்ரி குறித்து துல்கர் சல்மான் பாராட்டி பேசியுள்ளார். அதில், ” சுமதி வேடத்தில் இவரை தவிர வேறு எந்த இளம் கதாநாயகிகளும் ஏற்று நடித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் மீனாட்சி அந்த சுமதி வேடத்தை மிகவும் அழகாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் அதிக நேரம் திரையில் வரக்கூடிய பெரிய பாத்திரம். அதை அவர் முழு மனதுடன் ஏற்று நடித்துள்ளார்” என கூறியுள்ளார்.

Comments are closed.