ரத்தன் டாடாவின் சொத்துக்களின் உயில் பற்றி வெளியாகியுள்ள விபரங்கள்

7

ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்து சுமார் ரூ. 10,000 கோடி (இந்திய ரூபாயில்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜுகுதாரா வீதியில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோரப் பங்களா, 350 கோடி வங்கி வைப்புகள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீதப் பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்களாக உள்ளன.

உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை ‘டிட்டோ’ என்ற வளர்ப்பு நாய்க்குத் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார்.

இதைத் தவிர, அவரின் வீட்டு சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ள நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளதாக என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments are closed.