“இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்”- மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த விஜய்

7

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27 ஆம் திகதி நடைபெற இருக்கிறது.

மாநாட்டிற்க்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

” நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

Comments are closed.