எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி 28.10.2024 திகதி முதல் இரண்டு தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி புகையிரதமும், பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிய ரஜரட்ட ரஜின புகையிரதமும் சனிக்கிழமை முதல் வடக்கு பாதையில் பயணிக்கவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை கடந்த மாதம் 19 மற்றும் 21 இரு திகதிகளில் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
எனினும் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டகுறித்த சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
Comments are closed.