நாமல் ராஜபக்சவின் பொதுக்கூட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

12

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பொதுக்கூட்டத்திற்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் பாதுகாப்பிற்காக சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது பாடசாலை மாணவர் ஒருவரும், பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கூட்ட மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டதையடுத்து, அம்பகஸ்தோவ பொலிஸாரும் பண்டாரவளை விசேட குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகளும் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது மாணவர்களிடம் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் தமது பெற்றோர்கள் இருந்ததால் அவர்களுடன் வீடு திரும்பவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் வெலிமடை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.