கருத்துக் கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு தமக்கே அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வேட்பாளர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகித்தர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்களில் இருந்தவர்கள், உறுதி மொழி வழங்கும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான விடயங்களை மக்கள் எதிர்க்கின்றனர்.இதனால் தான் அநேகமான கருத்துக் கணிப்புக்களில் வேறும் வேட்பாளர்கள் வெற்றியீட்டுவார்கள் எனக் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாற்று சக்தியாக நட்சத்திர சின்னம் காணப்படுவதாகவும், இதனால் தமது வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
Comments are closed.