தேங்காயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

10

தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக காலி மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் தேங்காய்க்கான தட்டுப்பாடு இவ்வாறு தேங்காய் விலை அதிகரிக்க ஏதுவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

சந்தையில் தேங்காய்க்கான கிராக்கியும் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed.