ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஐ.தே.க

8

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதிக்கு எதிரான போக்கில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் குழுவினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Comments are closed.