ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆற்றைக் கடக்கும்போது படகு ஒன்று மூழ்கிய விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் சுமார் 25 பேர் ஆற்றைக் கடக்க படகில் பயணம் செய்தனர். திடீரென படகு நீரில் கவிழ்ந்தது.
இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மாயமானதாகவும் கிராமவாசிகள் கூற்றுப்படி தெரிய வந்தது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒரு மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ்களும் விபத்து பகுதிக்கு அனுப்பப்பட்டு, மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
பாலம் இல்லாததால், கிராமங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு இடையே பயணிக்க, அப்பகுதியில் உள்ள மக்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட படகுகளை அடிக்கடி பயன்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.