2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (15.08.2024) ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள பாராலிம்பியன்களுக்கும் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Comments are closed.