சிந்துஜாவின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்துள்ளதாக மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் நேற்று (15.08.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை.
ஆயினும், ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம். அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை” என்றுள்ளது.
Comments are closed.