கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணிக்கும் ஒரு பயணிக்கு 3,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சொகுசு பேருந்து சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, கொழும்பு – கோட்டை பிரதான தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இன்று(15.08.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம், விமான நிறுவனம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தனியார் பேருந்து நிறுவனம் இணைந்து இந்த பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் விமான பயணிகளின் வசதிக்காக இந்த பேருந்து சேவை அம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.