எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு (US dollar) நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறைவடையும் என சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.