ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

15

ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் மதுபான பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடியை இலங்கையின் அனைத்து ஹோட்டல்களும் திரும்ப பெற வேண்டும் என புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) தெரிவித்துள்ளது.

அத்துடன், மதுபான பொருட்களுக்கு இவ்வாறான தள்ளுபடிகளை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ‘NATA’ கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதத்திலேயே ‘NATA’ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நட்சத்திர ஹோட்டலில் ‘ஹெப்பி ஹவர்ஸ்’ (Happy Hours) என்ற பெயரில் மதுபான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தள்ளுபடி வழங்குவது, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தின் 37(2) பிரிவின் படி பாரிய அத்துமீறல் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குற்றத்துக்கு 50,000 ரூபா வரையிலான தண்டப்பணத்தை அறவிட முடியும்.

எனவே, 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க NATA சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் இணங்கி செயற்படுமாறு குறித்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.