பெண்கள் நலனுக்காக, பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ளார் ஒரு பெண்மணி. அவர், பிரபல உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்ஸ்!
உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்ஸ் (Melinda French Gates), அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெண்கள் மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஒரு பில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க இருக்கிறார்.
ஒரு பில்லியன் டொலர் என்பது, இலங்கை மதிப்பில் சுமார் 3,02,73,40,00,000.00 ரூபாய் ஆகும்.
மெலிண்டாவும் அவரது கணவரான பில் கேட்ஸும் திருமணமாகி 27 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். தம்பதியருக்கு முன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மெலிண்டா இப்படி கோடிகளை தானமாக வழங்குவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு, 10 ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைகளுக்காக வாரி வழங்குவதாக அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெலிண்டாவின் சொத்து மதிப்பு, 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Comments are closed.