சுவிட்சர்லாந்தில், ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.
நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Eaux-Vives என்னுமிடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் ஆறாவது மாடியிலுள்ள கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயது நபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.
அவர் விழுந்த இடத்தில் ஒரு கார் நிற்க, அந்தக் காரின்மீது விழுந்துள்ளார் அவர். ஆறாவது மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையில், அவர் விழுந்ததால், அந்தக் கார் பயங்கரமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் பொலிசார்!
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
Comments are closed.