இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதி தேர்தலையும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவுகளையும் ஒப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தேர்தல் கண்காணிப்பு குழுவின் உறுப்பினராகவே அவர் ஈடுபட்டுள்ளார்.
தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுடன் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் 16ஆவது மற்றும் 20ஆவது ஓவர்களுக்கு இடையிலான முக்கியமான காலகட்டத்தை ஒப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடைசி ஓவர்களில் யார் சிறப்பாகச் செயல்பட்டார்களோ அவர்களுக்குத்தான் இந்த தேர்தல் சிறப்பானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போட்டியின் முதல் கட்ட பவர் பிளேயில் சிறப்பாக விளையாடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.