கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று தீர்ப்பு

18

கட்டுநாயக்க (Bandaranayaka) சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேயகுணசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (22.07.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அசங்க அபேயகுணசேகர, நேற்று தோஹாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய, அசங்க அபேயகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருதுள்ளனர்.

இதன்போது, அவர் தலா ஒரு மில்லியன் ரூபா சரீர பிணை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments are closed.