ஆவண கோப்புக்கள் உள்ளதாக ரணிலை மிரட்டும் அனுர

21

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) உறுதியளித்துள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

“ஊழலுக்கு எதிராக போராடுவதை தவிர, பல்வேறு சிறிய வழக்குகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதை தமது அரசாங்கம் உறுதி செய்யும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தொடர்பான இரண்டு ஆவணக்கோப்புகள் என்னிடம் உள்ளன.

எனினும், தான் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க போவதில்லை.

எவ்வாறாயினும், சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தும். ஊழல் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.