முன்கூட்டியே நடத்தப்படவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

15

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஆகஸ்ட் நடுப்பகுதியில் மட்டுமே வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தகவல்களின்படி, முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தேர்தல், அக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதிக்கு பதிலாக செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும், அத்துடன்; 28 முதல் 42 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,

இதன் மூலம் தேர்தல் ஒன்றை நடத்த ஆணையத்திற்கு அதிகபட்சமாக 63 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

முன்னதாக, தமது அதிகாரிகளுடனான தொடர் சந்திப்பின்போது, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன,தேவைகளுக்கு ஏற்ப 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும் போது செலவுகள் இரட்டிப்பாகலாம் என்றும் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணையகம் வேட்புமனுத் தாக்கல் தினம் மற்றும் தேர்தலுக்கு முந்திய பிரசாரக் காலத்திற்கான பாதுகாப்புத் திட்டத்தை வரையுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

Comments are closed.