மாஸ்டர் ஷெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறிய இலங்கைப் பெண்

13

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர் ஷெப் (MasterChef Australia) சமையற்கலைப் போட்டியில் இலங்கைப் பெண் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்ற பெண் இறுதி மூன்று போட்டியாளர்கள் வரையில் முன்னேறியிருந்தார்.

எனினும் இறுதிப் போட்டிக்கான இரண்டு போட்டியாளர்கள் பட்டியலில் சாவிந்திரிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியாளர்களாக ஜோஸ் பெரி மற்றும் நாட் தாய்புன் ஆகீயோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சாவிந்திரி இலங்கை உணவு வகைகளை சுவையாக சமைத்து போட்டியில் அசத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நேர முகாமைத்துவம் தொடர்பில் சவிந்திரி சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டிருந்தது.

மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு போட்டியாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.