இந்தியாவில் நடைபெறும் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களின் திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் வைபவமாக நடைபெறவுள்ளது.
இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.