ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான புதிய தகவல்

13

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் அல்லது 12ஆம் திகதி அநேகமாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எவ்வித காரணங்களும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆணை தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி பதவி காலத்தை நீடிக்க முடியாது.

நாட்டை ஆட்சி செய்தல் தொடர்பிலான தேர்தல்கள் உரிய காலங்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும், 1982ம் ஆண்டில் மட்டும் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் எனவும் அதனை குறைக்கவோ அதிகரிக்கவோ முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.