இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.
அதனை வைப்பு செய்வதாக வங்கி கணக்கினை பெற்று, அதிலிருந்து 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரிகளிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 109 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.