எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய தொடருந்து சேவைகள் தடை: பாரிய நட்டம்

11

தொடருந்து சேவையில் ஈடுபடுவோரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய மொத்தம் 12 தொடருந்து சேவைகள் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எரிபொருள் பெட்டிகளை அனுப்பாததன் காரணமாக தொடருந்து திணைக்களத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தினமும் 10,000 கேலன்கள் கொள்ளளவு கொண்ட பத்து எரிபொருள் பெட்டிகள் தொடருந்தில் இணைக்கப்பட்டு விமான நிலையத்திற்கு தினமும் எரிபொருளை வழங்குவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.