பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கையை வந்தடைந்தார்.
இவர் நடிக்கும் வீ.டி12 (VD12) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் நேற்று(08.07.2024) இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
இதன்போது சில அதிரடி காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.